மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

  13
  மோடி

  57 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

  புதுடெல்லி:  மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

  vote

  மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும்,   உத்திர பிரதேசம், தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் காலியாக உள்ள 57 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

   

  இந்நிலையில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான அவரது ட்வீட்டில், இன்று ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றன.  மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.