மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்ல யாரிடம் ‘பாஸ்’ பெற வேண்டும்?. முழு விவரம் உள்ளே!

  0
  4
  people

  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது.

  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதே போல உள்ளூர் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் சொந்த வாகனங்களில் செல்வதற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் பாஸ் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

  ttn

  அதனால் பலரும் காவல்துறையினரிடம் பாஸ் வாங்குவதற்காக செல்கின்றனர். ஆனால், காவல்துறையினர் பாஸ் வழங்குவதில்லை. அப்படியென்றால் எங்கே பாஸ் வழங்கப்படும் என்று பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு எங்கு பாஸ் கிடைக்கும் என்பதை இந்த செய்திகுறிப்பில் தெரிந்து கொள்வோம். 

  ttn

  சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் சென்னை பெரு நகராட்சி ஆணையர் மூலம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

  சென்னை மற்றும் இதர மாநாகராட்சி பகுதிக்குள்ளாகவே ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல மண்டல அதிகாரி  ( Zonal Officer) மூலம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

  மாவட்டத்துக்கு உள்ளாகவே பயணிப்போருக்கு தாசில்தார் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

  சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

  திருமணம், துக்க நிகழ்ச்சி மற்றும் உடல் நலம் ஆகிய 3 காரணங்களுக்காக மட்டும் பாஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.