மக்களே உஷார்.. தடையை மீறி சென்றால் வாகனங்கள் பறிமுதல்: சென்னை காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

  0
  2
  TN Assembly

  கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அரசின் விதி முறைகளை மீறி வாகனங்கள் சென்ற வண்ணமே இருக்கின்றன. 

  ttn

  அவ்வாறு செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை  காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காகவும், மக்கள் முறையாக அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.