மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யவே அனைத்துக் கட்சிக் கூட்டம்… ஸ்டாலின் பதிலடி

  0
  3
  மு.க.ஸ்டாலின்

  மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசு பம்பரமாக சுழல்வது போல் இருந்தாலும் தீவிரம் இல்லை என்று கூறப்படுகிறது. நாகர்கோவிலில் தொடர்ந்து கொரோனா வார்டில் அடைக்கப்பட்டவர்கள் உயிரிழந்தாலும் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே அரசு கூறி வருகிறது. இதேபோல் சென்னையிலும் சில சம்பவங்களை மறைப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வராது என்று உறுதியாக கூறினார் விஜயபாஸ்கர். தமிழக சட்டப்பேரவையில் வயதானவர்களுக்குத்தான் வரும், உங்களுக்கு வயதாகிவிட்டதால் கவலையா என்று துரைமுருகனை கிண்டல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழகத்தில் பாதிப்பு இருக்காது என்று உறுதியாக கூறி, சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க முடியாது என்று வீராவேசமாக கூறினார் எடப்பாடி. இப்போது கொரோனா பரவிவிட்டது… கொரோனாவுக்கான தடுப்பு மாஸ்க் உள்ளிட்டவை பற்றாக்குறையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. போன வாரமே ஆர்டர் செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தற்போதும் ஆர்டர் செய்துள்ளோம் என்றே முதலமைச்சர் கூறுகிறார். இப்படி பல குழப்பங்கள் தமிழகத்தில் நிலவுகின்றன.

  இதனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும், குறைந்தபட்சம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசலாம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இது சுகாதார பிரச்னை, இதற்கு எதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று கேலி பேசினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு மு.க.ஸ்டாலின் கட்டமான பதிலை அளித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக  மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும்.

  தமிழ்நாடு அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்” என்று கூறியுள்ளார்.