மக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்

  0
  1
  TTV Dinakaran

  ஆறுகளில் தண்ணீர் வந்த பிறகு தூர்வாரி மக்களை ஏமாற்றுவது போல இதிலும் செயல் படக் கூடாது. அதனால், மாவட்டம் தோரும் அனைத்துத் துறை அதிகாரிகளை கொண்ட குழுவும், மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு சிறப்பு குழுவும் உடனடியாக அமைக்க வேண்டும்

  தமிழகத்தில் மழைக் காலம் துவங்கி விட்டது. தமிழகத்தை முன்னர் தாக்கிய மழையால் பல பகுதிகள் சேதமாகின. சென்னையை தாக்கிய வர்தாவும் வெள்ளமும் மக்களின் வாழ்க்கையை  புரட்டி போட்டன. பல வீடுகள் இடிந்து விழுந்தும், பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியும் காணப் பட்டன. அந்த புயலின் பாதிப்பில் இருந்து மீண்டு வரவே மக்களுக்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. 

  Flood

  இந்நிலையில் மழைக்கால பாதிப்புகளை தடுக்க மாநில அளவில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டி.டி.வி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் மழை தொடங்கி விட்டது, மேலும் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்ட சிறு மழைக்கே சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப் படுகிறது. நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. மக்களின் அச்சத்தை போக்கும் பொறுப்பில் அரசு உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

  TTV Dinakaran

  மேலும், ஆறுகளில் தண்ணீர் வந்த பிறகு தூர்வாரி மக்களை ஏமாற்றுவது போல இதிலும் செயல் படக் கூடாது. அதனால், மாவட்டம் தோரும் அனைத்துத் துறை அதிகாரிகளை கொண்ட குழுவும், மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு சிறப்பு குழுவும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் டி.டி.வி தினகரன் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கல் வெளியாகின்றன.