மக்களவை தேர்தலில் திருச்சியில் போட்டியிட திருநாவுக்கரசர் விருப்பம்!

  0
  6
  Thirunavukarasar

  மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

  சென்னை: மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

  மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக-வுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், அதிமுக-வுடன் பாஜக-வும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், திருச்சி, ஆரணி, கரூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 தொகுதியும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் 15, (இன்று) 16-ம் தேதிகளில் விருப்ப மனு பெறப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பொதுத் தொகுதிக்கு ரூ.25,000 தனித் தொகுதிக்கு ரூ.10,000, தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.10,000 விருப்பமனுவுடன் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.