மக்களவை தேர்தலில் தமிழகம் ; தேர்தல் தொடர்பான முக்கிய விவரங்கள்

  0
  1
  சுனில் அரோரா - தேர்தல் ஆணையம்

  மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

  மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

  தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

  வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 26-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மார்ச் 27-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை, மார்ச் 29-ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள்.

  ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்கு பதிவு தொடங்குகிறது, மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

  தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.