மக்களவை தேர்தலில் எந்த மோசடியும்  நடக்கல… நியாயமாகதான் நடந்தது- அமெரிக்கா கருத்து

  13
  mODI

  இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

  17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்துறை பிரபலங்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பலர் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாகவும், மோடி அரசு திட்டமிட்டு ஊழல் செய்து மீண்டும் அரியணையில் அமர்ந்ததாகவும் பலர் குற்றஞ்சாட்டினர். 

  இந்நிலையில் இந்தியாவில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் நடந்துள்ளதாகவும் நாங்கள் நம்புகிறோம் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தலில் எத்தகைய மோசடியும் நடக்கவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் அமெரிக்க வலுவான நட்புறவினை கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் பார்க்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அமைதியுடன் தேர்தலை நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, இந்திய மக்களுக்கு நாங்கள் பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.