மக்களவை, இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு; லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்!

  0
  5
  கோப்புப்படம்

  இவ்விரு தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வரும் அரசியல் கட்சிகள், இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது

  சென்னை: மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் என லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பண்பாடு  மற்றும் மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. இவ்விரு தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வரும் அரசியல் கட்சிகள், இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

  இந்நிலையில், மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் என லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பண்பாடு  மற்றும் மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு தேர்தலின் முன்பும், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் பண்பாடு  மற்றும் மக்கள் தொடர்பகம் சார்பில் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மார்ச் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை 21,464 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

  rahul stalin

  அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  aiadmk alliance

  தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி 3 முதல் 5 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அமமுக கூட்டணி 1 முதல் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

  ttv dhinakaran

  அதேபோல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 2 முதல் 3 தொகுதிகளிலும், அமமுக 3 முதல் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 2 தொகுதி முடிவுகளை கணிக்க முடியாத நிலை உள்ளது எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிங்க

  ஜெய்பீம் என்று மேடைமேடைக்கு ஏமாற்றவில்லை: பா.ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் வன்னி அரசு