மகாராஷ்டிரா முதல்வராகிறார் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே

  0
  7
  உத்தவ் தாக்கரே

  மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. ஆனால் முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால்தான் ஆதரவு கொடுப்போம் என சிவசேனா கோரிக்கை வைத்தது. ஆனால் பாஜக அதனை ஏற்க மறுத்து விட்டது. மேலும் ஆட்சி அமைக்கவும் பாஜக உரிமை கோரவில்லை. இதனையடுத்து சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த கட்சிகள் கூடுதல் அவகாசம் கேட்டன. இதனையடுத்து அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்தார். தற்போது அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

  Uddhav Thackeray

  இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள்  இன்று மும்பையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவே 5 ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக இருப்பார் என ஒரு மனதாக முடிவுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.