மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம்

  0
  4
  pmmodi

  பிரதமர் மோடி பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்

  மும்பை: பிரதமர் மோடி பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

  மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மும்பையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்கவுள்ளார். பின்னர், பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மன் குறித்த புத்தகத்தை வெளியிடவுள்ளார்.

  இதையடுத்து, கல்யாணில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர், தானே-கல்யாண், தாஹிசார்-பாயான்தெர் ஆகிய இரு வழித்தடங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

  அதன்பின்னர் அங்கிருந்து புனே செல்லும் அவர், அங்கு மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள மூன்றாவது வழித்தடத்திற்கான கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, தனது மகாராஷ்டிரா பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பிரதாமர் மீண்டும் டெல்லி செல்கிறார்.