மகாராஷ்டிராவில் பரப்பு! பாஜகவின் கோரிக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

  0
  2
  உச்சநீதிமன்றம்

  மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்துள்ளார். இந்த அரசுக்கு எதிராக உடனே நம்பிக்கை வாகெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தன. 

  maharashtra

  அவசர வழக்காக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. . அப்போது பாஜக சார்பில் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பாஜக முன் வைத்த இந்த கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனர். நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதற்கு முன்னதாக அவையின் மூத்த உறுப்பினர் இடைக்கால சபாநாயகராக இன்றே தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் நாளை காலை எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நடைபெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரகசிய வாக்கெடுப்பு கிடையாது என்றும் வாக்கெடுப்பை நேரலை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.