மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 335 ஆக அதிகரிப்பு! கேரளாவில் 237!!

  0
  1
  கொரோனா வைரஸ்

  இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு இதுவரை45பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 1,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 148 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுக்க மக்கள் கொரோனா பீதியில் காணப்படுகின்றனர்.

  இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு இதுவரை45பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 1,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 148 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுக்க மக்கள் கொரோனா பீதியில் காணப்படுகின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

  ttn

  இந்த நிலையில், மும்பையில் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 335-ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 3 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு 237 ஆக அதிகரித்துள்ளது.