மகள் போல் இருந்த மருமகளிடம் அத்துமீறிய மாமனார் சத்தம் போட்டதால் கொலை செய்த கொடூரம் !

  0
  20
  மாதிரி படம்

  மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது அவர் கத்தியதால் மாமனார் கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
  கர்நாடகா மாநிலம் மண்டியா அருகே ராகி முத்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அனில் என்பவருக்கும் வீணா என்பவரும் வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அனில் தந்தை நாகராஜூ உள்பட கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.

  nagaraj

  கடந்த சில மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அனிலின் தந்தை நாகராஜூ, மருமகள் வீணாவிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மருமகள் முன்னாடி ஆடையின்றி நிற்பது போன்ற கேவலமான காரியங்களை செய்து வந்துள்ளார் நாகராஜூ. இந்நிலையில் சம்பவத்தன்று மருமகள் அறைக்குள் நுழைந்த மாமனார் நாகராஜு தன்னுடைய ஆடைகளை களைந்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீணா கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் கூடிவிட, பயந்துபோன நாகராஜூ சற்றும் எதிர்பாராமல் அங்கிருந்த கத்தியை எடுத்து மருமகள் வீணாவை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வீணா பரிதாபமாக உயரிழந்தார். இதை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் வீணாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மாமனார்  நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மருமகளை மகளாக பார்க்க வேண்டிய வயதில் மாமனாரின் தவறான எண்ணத்தால் ஒரு பெண் அநியாயமாக உயிரிழக்க நேரிட்டுள்ளது.