மகளுடன் பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டுக்கு விசிட் அடித்த சேரன்

  0
  13
   சேரன்

  பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் முதல் வேலையாக இயக்குநர் சேரன் வீட்டுக்கு விசிட் அடித்து அவரின் நலம் விசாரித்தனர். 

  நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சாக்ஷி வீட்டுக்கு சேரன் தனது மகளுடன் சென்றுள்ளார். 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரது மனதை கவர்ந்தவர் இயக்குநர்  சேரன். லாஸ்லியாவை மகளாக நினைத்து சேரன் கொடுத்த அட்வைஸ், செயல்கள் என அனைத்தும் பாராட்டப்பட்டது.  இருப்பினும்  நிகழ்ச்சி முடிந்து தனிப்பட்ட முறையில் லாஸ்லியா சேரன் வீட்டுக்கு செல்லவில்லை. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் முதல் வேலையாக இயக்குநர் சேரன் வீட்டுக்கு விசிட் அடித்து அவரின் நலம் விசாரித்தனர். 

  sakshi

  அதுமட்டுமில்லாது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் சேரன்  குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர். பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் ஒன்றுகூடி தீபாவளி திருநாளைக் கொண்டாடிய இவர்களின்  புகைப்படம் வேகமாக பரவியது.

   

  இந்நிலையில் சாக்ஷி  வீட்டிற்கு சேரன் தனது மகளுடன் சென்றுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி, ‘குடும்பத்துடன் சிறப்பான நேரம். என்னுடைய அப்பாவும் சேரன் அண்ணாவும் ஒரே வீட்டில் பார்ப்பது மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.