மகளிர் தினத்தை முன்னிட்டு திரௌபதி திரைப்படம்…ஏராளமான பெண்கள் கண்டுகளித்தனர்!

  0
  4
  திரௌபதி

   இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர்

  இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் வெளியாகி ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. 

  ttn

  இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் பெருந்துறை  முருகன் திரையரங்கில் பெண்களுக்காக பிரத்யேகமாக திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது.

   

  திரௌபதி

  முன்னதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி  பெண்கள் தினத்தை முன்னிட்டு தன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்களை திரௌபதி படம் பார்க்க வைத்தது  குறிப்பிடத்தக்கது.