மகனை பலிவாங்கிய பாதாள சாக்கடைக்கு மூடி போட்ட தந்தை

  0
  1
  டேமியன் ஜாண்ட்ஜீஸ்

  காலம் ஒவ்வொரு நொடியிலும் மர்மத்தை ஒளித்து வைத்திருக்கிறது. சிலருக்கு சந்தோஷத்தையும், சிலருக்கு  அதிர்ச்சியையும், சிலருக்கு அவமானத்தையும் சிலருக்கு காலமெல்லாம் நினைத்து கலங்கும் அளவுக்கான சோகத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது.

  காலம் ஒவ்வொரு நொடியிலும் மர்மத்தை ஒளித்து வைத்திருக்கிறது. சிலருக்கு சந்தோஷத்தையும், சிலருக்கு  அதிர்ச்சியையும், சிலருக்கு அவமானத்தையும் சிலருக்கு காலமெல்லாம் நினைத்து கலங்கும் அளவுக்கான சோகத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது.
  அன்றைய நாள் டேமியன் ஜான்ட்ஜீஸ் என்கிற தந்தைக்கு நன்றாக விடியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள், தனது வீட்டின் முன்னால் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த டேமியன் ஜாண்ட்ஜீஸ், காலமெல்லாம் வருந்தும் படியாக நடக்க இருக்கும் சம்பவத்தைப் பற்றி எதுவும் அறியாதவராய், திடீரென தன் நண்பரைக் காண மகனை அப்படியே விட்டுவிட்டு சாலையைக் கடந்தார்.

  drainage

  நண்பரைப் பார்த்து கையசைத்தப்படியே நகர்ந்த டேமியன், தன் ஆசை மகனும் தந்தை நகர்வதை அறிந்து, தன் பின்னாலேயே வருவதை அவர் அறியவில்லை. விதி இப்படி தான் அதிர்ச்சியை அவரது காலடியில் ஒளித்து வைத்திருந்தது. தீடீரென பெரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த டேமியனின் கண்ணெதிரிலேயே தன் ஆசை மகன், மழைநீர் தேங்கிய சாலையில் மூடாமல் கிடந்த பாதாள சாக்கடைக்குள் விழுவதைக் கண்டார். அதில் குதித்து காக்க முயன்ற போதும், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 
  இச்சம்பவத்தை அடுத்து அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் மனம் கனத்ததாகவும், வேறு யாரும் இதுபோல் பாதாள சாக்கடைக்குள் விழுந்து விடாமல் இருப்பதற்காக அந்த பாதாள சாக்கடைக்கு தன் மகனின் சிரித்த புகைப்படத்தைப் பிரிண்ட் செய்து, மூடி போட்டதாகவும் கூறுகிறார் டேமியன். 

  father and son

  இறப்பதற்கு கொஞ்சம் நேரத்திற்கு முன் தன் மகன் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்த புகைப்படத்தை அந்த பாதாள சாக்கடையின் மூடியில் பிரிண்ட் செய்து, அதைப் பார்க்கும் போதெல்லாம் என் மகன் தற்போதும் என்னை நோக்கி சிரிப்பதைப் போன்றே உணர்கிறேன் என்று உணர்ச்சி பொங்க சொல்கிறார்.