‘மகனை கொன்றுவிட்டு வா’ என்று கூறிய காதலன்: விஷ ஊசி போட்டு கொன்ற தாய்; அதிர்ச்சி சம்பவம்!

  0
  5
  kids

  தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  வேலூர் : தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  வேலூர் மாவட்டம் வெள்ளநாயக்கனேரியைச் சேர்ந்த சந்தியா என்பவர்  சரவணன் என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் விரோஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்த சந்தியா கடந்த 2 ஆண்டுகளாகக் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

  murder

  திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த சந்தியாவுக்கு பிதாமகன் என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால்  சந்தியாவுக்கு குழந்தை இருப்பதால், குழந்தையைக் கொன்றுவிட்டு வந்தால் உன்னை  ஏற்றுக் கொள்கிறேன் என்று அந்த நபர் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் மகனை  விஷ ஊசி போட்டு சந்தியா கொலை செய்துள்ளார். செவிலியராகப் பணிபுரியும் தாய் ஊசி போட்ட பின்னரே விரோஷன் உயிரிழந்ததாக பொதுமக்கள் கூறவே, சந்தியாவையும் அவரது தாயையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.