மகனுக்காக அ.தி.மு.க-வை புகழ்ந்து தள்ளும் துரைமுருகன்! – தி.மு.க-வினர் புலம்பல்

  0
  1
  duraimurugan

  தி.மு.க பொருளாளராக இருந்து வந்தவர் துரைமுருகன். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்தான் அடுத்த பொதுச் செயலாளர் என்று உறுதியான நிலையில் சட்டப்பேரவையில் அவரது செயல்பாடுகள் தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  தன்னுடைய மகனின் தண்ணீர் நிறுவனம், கல்லூரி என அவருடைய தொழில்கள் சிறப்பாக செயல்பட அ.தி.மு.க அமைச்சர்களுக்கு ஆதரவாக துரைமுருகன் பேசி வருவதாக தி.மு.க-வினர் புலம்பி வருகின்றனர்.
  தி.மு.க பொருளாளராக இருந்து வந்தவர் துரைமுருகன். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். அவர்தான் அடுத்த பொதுச் செயலாளர் என்று உறுதியான நிலையில் சட்டப்பேரவையில் அவரது செயல்பாடுகள் தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் அழைத்தபோதே அ.தி.மு.க-வுக்கு செல்லாதவர் துரைமுருகன். கருணாநிதி என் தலைவர் என்று உறுதியாக நின்ற துரைமுருகன் தன்னுடைய மகனின் தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலையில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துள்ளார் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

  eps

  இதற்கு அவர்கள் ஒன்று, இரண்டு அல்ல… ஏராளமான சம்பவங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா இருந்த காலத்தில் தி.மு.க-வினரைப் பார்க்கவே அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பயப்படுவார்கள். ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிபோக சொல்லப்பட்ட காரணம், தி.மு.க-வினருடன் சிரித்துப் பேசுகிறார் என்பதுதான். அந்த அளவுக்கு தி.மு.க-வினரை விரோதிபோல பார்த்து வந்த அ.தி.மு.க-வினர் தற்போதுதான் நட்புடன் பார்க்க ஆரம்பித்துள்ளனர். மானியக் கோரிக்கையின்போது அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்து பேசும்போது அவர்களை ஏகத்துக்கும் துரைமுருகன் புகழ்ந்து தள்ளுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் தங்கமணியின்  துறை தொடர்பான மானியக் கோரிக்கை நடந்தது. அப்போது தங்கமணி எந்த குறிப்பும் இன்றி பேசுவதைப் பார்க்கும்போது துறை பற்றி அமைச்சர் தங்கமணி எந்த அளவுக்கு உள்வாங்கியிருக்கிறார் என்று தெரிகிறது என்று புகழ்ந்தார்.
  அமைச்சர் வீரமணியைப் பற்றி பேசும்போது வீரமணியார் என்றே மிகவும் பவ்யமாக அழைக்கிறார். அனைத்துக்கும் மேலாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய அறைக்கே சென்று தன்னுடைய மகன் பற்றிப் பேசிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டதாக துரைமுருகனின் மகனின் மினரல் வாட்டர் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது பற்றி அவர் பேசியதாக கூறப்படுகிறது. துரைமுருகன் சந்திப்பு பற்றி முதல்வரே தனக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் கமெண்ட் செய்து சிரித்ததாக கூறப்படுகிறது. 

  stalin

  தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் மகனுக்காக இப்படி வழிந்து சென்று அவமானப்பட வேண்டுமா என்றும் தி.மு.க-வினர் கேள்வி எழுப்புகின்றனர். இவை அனைத்தும் ஸ்டாலின் காதுகளுக்கும் போய்ச் சேர்ந்ததாக தி.மு.க-வினர் கூறுகின்றனர். இருப்பினும் துரைமுருகன் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக இதுபற்றி எதுவும் பேசாமல் உள்ளாராம் ஸ்டாலின்.