ப. சிதம்பரத்திற்கு முன்ஜாமீன்: வரும் 26 ஆம் தேதி வரை கைது செய்ய தடை!

  0
  1
  vijayakanth

  புதுடெல்லி:  ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து  ப.சிதம்பரம் நேற்று முன்தினம் இரவு  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவரிடம்  சிபிஐ  அதிகாரிகள், வழக்கு குறித்து விசாரணையைத் தொடங்கினர். இதை தொடர்ந்து இந்த வழக்கில் சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

   

  இதையடுத்து இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது பேசிய அவர், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் அவர் ஏற்கனவே தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு செல்லாது. சிதம்பரம் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமானது. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டும் தான் உண்மைகள் வெளியாகும். என்னதான் விசாரணை நடந்தாலும் உண்மைகள் வராது. அவருக்கு சட்ட நுணுக்கங்கள் தெரியும். என்னதான் இந்த சகித்து அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சிதம்பரம் சொன்னாலும், எங்களிடம் வலுவான ஆதாரங்கள் இருக்கிறது’ என்றார். 

  இந்நிலையில் வழக்கை உச்சநீதிமன்றம், ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கியதோடு, வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது