போலீஸ் ஸ்டேஷன் வாசலில் டிக் டோக்: 4 பேர் மீது வழக்குப்பதிவு; வைரல் வீடியோ!

  0
  6
  tik tok

  காவல்நிலையம் முன் டிக் டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சிவகாசி: காவல்நிலையம் முன் டிக் டாக் செய்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டாக். இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது.

  அந்த வகையில், சிவகாசி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், தங்கேஸ்வரன், முருகேசன், குருமதன் ஆகியோர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் சீருடையில் வில்லன் வீட்டுக்குள் நுழையும் போது, ‘இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்’ என்று வசனம் பேசும் ஒரு காட்சி வரும். இந்த காட்சியை போலீஸ் ஸ்டேஷன் முன், டிக் டாக் செயலி மூலம் வீடியோ  செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

  இதன் காரணமாக இளைஞர்கள் 4 பேர் மீது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவமரியாதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.