போலீஸுன்னா உயரமா இருக்கனும்ல : தலையில் சுவிங்கம் வைத்து மோசடி செய்த வாலிபர்!

  0
  4
  Dhayanidhi

  உடல் தகுதித் தேர்வு சேலம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை மற்றும் தீயணைப்புத் துறை ஆகிய அனைத்திற்கும் உடல் தகுதித் தேர்வு சேலம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உடல் தகுதித் தேர்வு கடந்த 6 ஆம் தேதி துவங்கி 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தேர்வில் காவலர்களின் உயரம், எடை உள்ளிட்ட அனைத்தும் கணக்கிடப்பட்டுத் தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு, போதிய எடை மற்றும் உயரம் இல்லாத காவலர்கள் ரிஜெக்ட் செய்யப்படுவர் என்பது அனைவரும் அறிந்தவையே. 

  Selection

  மூன்றாவது நாளாக நடக்கும் இந்த தேர்வுக்கு இன்று 400க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அதிகாரிகள் தேர்வுக்கு வந்த அனைவரின் உயரத்தையும் கணக்கிட்டுள்ளனர். அப்போது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தயாநிதி என்ற நபருக்கு அதிகாரிகள் உயரத்தைக் கணக்கிட்டுள்ளனர்.

  Height

  அவரின் தலையில் ஒரு பகுதி மட்டும் வீங்கியிருப்பது போன்று உணர்ந்த அதிகாரிகள் அவரிடம் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர் உயரத்தை அதிகரித்துக் காட்டுவதற்குத் தலையின் ஒரு பகுதியில் மட்டும் பபுள்கம் ஒட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபரை உடல் தகுதித் தேர்விலிருந்து அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.  

  Thayanidhi