போலீசாக களமிறங்கும் அட்டகத்தி நாயகி!

  0
  1
  நந்திதா

  நடிகை நந்திதா நடிக்கவிருக்கும் ஐபிசி 376 படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

  சென்னை: நடிகை நந்திதா நடிக்கவிருக்கும் ஐபிசி 376 படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

  தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதையடுத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி என பல படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என எப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.

  nanditha swetha

  இந்நிலையில் பிரபுசாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பாராமன் இப்படத்தை  இயக்குகிறார். நடிகை நந்திதா புதிய படத்தின் பிஸ்ரட் லுக் போஸ்ட்டரை நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். ஐபிசி 376 என படக்குழுவினர் பெயரிட்டுள்ள இப்படத்தில் நந்திதா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பாலியல் குற்றங்களை மையமாக வைத்து இந்த படம் இருக்கும் என்று டைட்டில் மூலம் தெரிகிறது. மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நந்திதா இருப்பதால் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.