போலி நிறுவனங்கள் குறித்த தகவல் வேண்டி 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்… ப.சிதம்பரத்துக்கு முற்றும் நெருக்கடி…

  0
  8
  hair-loss-female-qik-2018

  ஐ.என்.எக்ஸ். மீடியா வெளிநாடுகளில் முறைகேடாக நிதிபெற ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்திக் சிதம்பரமும் உதவி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். 

  இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இங்கிலாந்து, பெர்முடா, சுவிட்சர்லாந்து, மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் உதவி கேட்டு சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது. அதில், அனைத்து போலி நிறுவனங்களின் கணக்கு விவரங்கள் தரும்படி கேட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி வருவதால் இதனால் ப.சிதம்பரத்துக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

  இதற்கிடையே சி.பி.ஐ. காவலில் உள்ள ப.சிதம்பரம், விசாரணையின் போது, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு உள்பட பெரும்பாலான வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு அவர் மழுப்பலாக பதில் சொல்வதாகவும், தெரியாதது போல் காட்டி கொள்வதாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.