போலி அக்கவுன்டுகளுக்கு குட் பை சொன்ன பேஸ்புக்.. ஒரே நாளில் 300 கோடி போலி அக்கவுன்ட் காலி!

  0
  5
  facebook

  பேஸ்புக் நிறுவனம் ஒரே நாளில் சுமார் 300 கோடிக்கும் மேலான போலி அக்கவுண்ட்களை கண்டறிந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

  பேஸ்புக் நிறுவனம் ஒரே நாளில் சுமார் 300 கோடிக்கும் மேலான போலி அக்கவுண்ட்களை கண்டறிந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது போலி தரவுகளும் கோடிக்கணக்கில் நீக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  FB

  பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நாளுக்கு நாள் பதிவிடப்படும் தகவல்களில் பெரும்பாலானவை வதந்திகள் மற்றும் சர்ச்சைகளை கிளப்பும் வண்ணம் இருக்கின்றது. இது போன்ற சர்ச்சையான பதிவுகள் போலி கணக்குகளில் இருந்து பதிவிடப்படுவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன

  fb

  இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போது தரவுகள் மற்றும் போலி கணக்குகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஏற்றார்போல், தற்போது ஆக்டிவாக இருக்கும் கணக்குகளில் 300 கோடி போலி கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியிருக்கிறது. நீக்கப்பட்ட போலி கணக்குகளில் சுமார் 240 கோடிக்கும் மேலான கணக்குகள் உண்மையிலேயே போலியான கணக்குகளாக கருதப்படுகிறது. 

  fb

  இதற்கிடையில், சுமார் 1.80 கோடி தகவல்கள் சர்ச்சையானது என நீக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 1.20 கோடி தகவல்கள் போலியானவை எனவும் நீக்கப்பட்டிருக்கிறது. தற்போது நீக்கப்பட்ட 240 கோடி போலி அக்கவுண்ட்கள் பேஸ்புக்கில் இருக்கும் மொத்தம் அக்கவுண்ட்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆகும்.

  அடுத்தகட்டமாக ஆபாசமான பதிவுகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் ஆபாசம் நிறைந்த தகவல்கள் விரைவில் நீக்கப்படும் எனவும் பேஸ்புக் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  fb

  கடந்த ஆறு மாதத்தில் ஒப்பிடுகையில், தற்போது நீக்கப்பட்ட பதிவுகள் சுமார் 13 சதவீதம் ஆகும். இனிவரும் காலகட்டத்தில் இது போன்ற சர்ச்சையான பதிவுகள் இந்த அதிரடி முடிவிற்குப் பிறகு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இனி தீவிரவாதத்தை தூண்டும் விதமாக பதிவுகளை இடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் சமூக வலைதளங்களில் இருக்கும் சுதந்திரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.