போர்வெல் போட்டு மழைநீரை பூமிக்குள் அனுப்பும் தஞ்சாவூர்காரர் – வேற லெவல் நீர் மேலாண்மை!

  0
  9
  Dinesh with his Rainwater harvesting system

  வீணாக இருந்த போர்வெல் குழாய்களைச் சுற்றி குழி வெட்டி மழைநீரும், வயலில் பாய்ச்சிய பிறகு வீணாகும் உபரி நீரும் நிலத்துக்கு அடியில் செல்லும்படி செய்து மழைநீரை சேகரிக்கத் தொடங்கியுள்ளார்.

  தஞ்சாவூர், திருவையாறு அருகே அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் தனது வயலில் செயல்படாமல் வீணாக இருந்த ஆழ்குழாய் போர்வெல் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்க `போர்வெல் ரீசார்ஜ்’ முறையைப் பயன்படுத்தி புதிய முறையில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை உயரச் செய்வதுடன், விவசாயத்தையும் சிறப்பாகச் செய்து அசத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக காவிரியில் முறையாக தண்ணீர் வரவில்லை. மூன்று ஆண்டுகளாக விவசாயத்தை கவனித்து வந்த தினேஷ், ஆற்றில் தண்ணீர் வராததால் ரொம்பவே கஷ்டப்பட்டார். இதையடுத்து, தனது நிலத்தில் 110 அடிக்கு ஆழ்குழாய் கிணறு மூலம் போர்வெல் ஒன்றை அமைத்தார். சில காரணங்களால் அதில் தண்ணீர் வராமல் போனது. பின்னர் மீண்டும் வேறு இடத்தில் மற்றொரு போர்வெல் அமைத்து விவசாயம் செய்துவந்தார்.

  Rainwater harvesting borewell

  எல்லோரும் தண்ணீர் வராத குழாய்களைக் கழற்றி விற்பனை செய்துவிடலாம் என யோசனை சொல்ல, தினேஷுக்கு மட்டும் இதைப் பயன்படுத்தி மழைநீரை சேமித்து நிலத்தடிக்குள் விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. பின்னர் வீணாக இருந்த போர்வெல் குழாய்களைச் சுற்றி குழி வெட்டி மழைநீரும், வயலில் பாய்ச்சிய பிறகு வீணாகும் உபரி நீரும் நிலத்துக்கு அடியில் செல்லும்படி செய்து மழைநீரை சேகரிக்கத் தொடங்கியுள்ளார். இதை வேளாண்மைத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி விவசாயிகள் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.