போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க வேண்டாம்: மதுரை உயர்நீதி மன்றம் கருத்து..!

  0
  1
  Madurai high court

  நாங்குநேரி தொகுதியில் உள்ள பட்டியலின மக்களை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.

  நாங்குநேரி தொகுதியில் உள்ள பட்டியலின மக்களை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை அளித்துப் பல வருடங்கள் ஆகியும் அரசு இன்னும் அதனைப் பற்றி எந்த அறிவிப்பும் கொடுக்காததால், நாங்குநேரியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலைப் புறக்கணித்து 113 கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

  Protest

  இதனால், அதிமுக கட்சியினர் அசோக் குமார் என்பவர் அனுமதியின்றி வீடுகளில் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் வாக்கு கேட்க வருபவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறி அப்பகுதி மக்களின் மீது வழக்குப் பதிவு செய்தார்.

  Madurai high court

  இன்று அந்த வழக்கு உயர் நீதி மன்றத்தில் விசாரிக்கப் பட்டது. அதில் மதுரை உயர் நீதி மன்ற நீதிபதிகள், அரசின் கவனத்தை ஈர்க்க கறுப்புக்கொடி ஏற்றிப் போராடுவது மக்களின் உரிமை என்றும் அவர்களை காவல்துறையினர் பயமுறுத்தக் கூடாது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து. 113 கிராம மக்கள் சேர்ந்து தேர்தலைப் புறக்கணிப்பது தவறு என்றும் தேர்தலைப் புறக்கணித்து தங்களது வலிமையான ஓட்டுரிமையை இழக்க வேண்டாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.