போராட்டத்தின் நடுவிலும் மனித நேயத்தை காட்டிய மக்கள்! ஆம்பலன்ஸ்க்கு வழிவிட்டு உதவிய மக்கள்!!

  0
  2
  Protest

  ஹாங்காங் நாட்டில் நடைபெறும் கடும் போராட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு மக்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

  ஹாங்காங் நாட்டில் நடைபெறும் கடும் போராட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு மக்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

  ஹாங்காங் நாட்டில் மக்கள் சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 2 கோடி மக்களுக்கும் மேல் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஹாங்காங்கிலுள்ள ரயில் நிலையங்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள்கூடி போராட்டம் செய்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் வழிவிட்டனர். அவர்கள் அனைவரும் ஒருசில நொடிகளில் வழிவிட்டு அவர்கள் திரும்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆம்புலன்ஸ் செல்ல மக்கள் வழிவிட்டது அனைவரது மனதையும் நெகிழவைத்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கடும் போராட்டத்திற்கு இடையிலும் மனிதநேயத்துடன் நடந்துக் கொண்ட மக்களை நெட்டிசன்கள் அதிகம் பேர் பாராட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த வாரம் போராட்டம் நடத்திய இடத்தில் கிடந்த குப்பைகளை போராட்டக்காரர்களே சுத்தம் செய்த வீடியோ வைரலானது.