போன் செய்தால் வீடு தேடிவரும் கஞ்சா… சிக்கிய ஐஐடி ஊழியர்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

  0
  4
  மாதிரி படம்

  சென்னையில் வீட்டுக்கு வந்து கஞ்சா டோர் டெலிவரி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐ.டி ஊழியர்களை குறிவைத்து கஞ்சா பிசினஸ் செய்துவந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
  சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்துள்ள ராஜிவ் காந்தி சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை ஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  சென்னையில் வீட்டுக்கு வந்து கஞ்சா டோர் டெலிவரி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐ.டி ஊழியர்களை குறிவைத்து கஞ்சா பிசினஸ் செய்துவந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
  சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்துள்ள ராஜிவ் காந்தி சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை ஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கஞ்சா விற்பனை என்றால், சாலை சந்திப்புகளில், பான் மசாலா போட்டபடி நிற்பவர்கள் விற்பனை செய்வது என்று படங்களில் காட்டப்படும் காட்சியை நினைக்க வேண்டாம். போன் செய்தால் டிப்டாப் ஆசாமிகள் வீடு தேடிவந்து டெலிவரி செய்யும் அளவுக்கு பக்காவாக கஞ்சா தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்க போலீசார் வலைவிரித்தனர்.

  weed

  தீவிர தேடலுக்குப் பிறகு கஞ்சா விற்பனை செய்யும் நபரின் செல்போன் நம்பர் கிடைத்துள்ளது. ஆனால், எப்படி கஞ்சா வாங்குவது என்ற தகவல் கிடைக்கவில்லை. இதனால், வெவ்வேறு எண்களிலிருந்து அந்த எண்ணைத் தொடர்புகொண்டு கஞ்சா வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஆனால், போனை எடுத்த மர்மநபர் எந்த பதிலும் சொல்லாமல் போனைத் துண்டித்துள்ளார். 
  பிறகு விசாரித்தபோது சரியான கோட் வேர்ட் சொன்னால் மட்டும்தான் அந்த நபர் பேசுவார் என்று தெரிவித்துள்ளனர். முன்பு கஞ்சா வழக்கில் சிக்கியவர்களை விசாரித்து கோட் வேர்டை போலீசார் தெரிந்துகொண்டனர். குறிப்பிட்ட அந்த எண்ணை அழைத்து கோட் வேர்ட் சொன்னதும் எவ்வளவு வேண்டும் என்று கேட்டுள்ளார். போலீசார் ஒரு பெரிய எண்ணிக்கையை குறிப்பிட, என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் விலையை சொல்லியுள்ளனர். டோர் டெலிவரி செய்ய முடியுமா என்று கேட்டபோது, முதல் முறை வாங்குபவர்களுக்கு டோர் டெலிவரி கிடையாது. நாங்கள் சொல்லும் இடத்தில் வந்து வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
  இதைத் தொடர்ந்து, கோட்டூர்புரத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளனர். போலீசார் அங்கு சென்றபோது யாரும் வரவில்லை. பின்னர் போலீசை தொடர்புகொண்ட கஞ்சா நபர், மத்திய கைலாஷ் வரும்படி கூறியுள்ளார். போலீசாரும் அங்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கும் அந்த நபர் வரவில்லை. சோழிங்கநல்லூர் வரை அலையவிட்டு கடைசியில் சோழிங்கநல்லூரில் வைத்துக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு சிட்டாக பறந்துள்ளார் கஞ்சா நபர். ஏற்கனவே, பல முணைகளில் நிறுத்தப்பட்டிருந்த போலீசார், கஞ்சா நபரைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த நபர் தரமணியில் உள்ள தன்னுடைய வீட்டுக்குள் நுழையவே, உடனடியாக போதைப்பொருள் தடுப்பு போலீசாரும் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். 

  it employees

  அங்கு கஞ்சாவை பாக்கெட் செய்து கொண்டிருந்த மூன்றுபேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது போலீசாருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. கைது செய்யப்பட்ட அரவிந்த் என்பவர் சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்ததும், கமலக்கண்ணன் டைடல் பார்க்கில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிந்தது. லிண்டன் டோனி என்பவர் கஞ்சா டோர் டெலிவரி செய்யும் வேலை செய்துவந்தது தெரிந்தது. அந்த அந்த வாரத்துக்கு ஒரு ரகசிய வார்த்தையை உருவாக்கி தனக்குத் தெரிந்த ஐ.டி ஊழியர்கள் மூலமாக கமலக்கண்ணன் கோட் வேர்டை பரப்புவாராம். கஞ்சா பயன்படுத்துபவர்கள் இந்த கோட் வேர்டுக்காக காத்திருப்பார்களாம். அவர்களே தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லி பரப்பிவிடுவார்களாம். மற்றவர்களுக்கு இதுபற்றி வாய் திறக்கமாட்டார்களாம்.
  இப்படி விற்பனை செய்யப்படும் கஞ்சா, வார இறுதி பார்ட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. யாரிடமிருந்து கஞ்சா வாங்குகிறார்கள், பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐ.ஐ.டி ஊழியர் உள்ளிட்டவர்களின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், பலரும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.