போதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள் !

  0
  17
  Driver

  சிரமேல்குடி கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வயலில் வேலை பார்க்கும் அவரது தாய்க்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

  தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தாலுகா அருகே உள்ள சிரமேல்குடி கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வயலில் வேலை பார்க்கும் அவரது தாய்க்கு நேற்று மதியம்  உணவு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அவர் செல்லும் வழியே இரண்டு பேர் அந்த பெண்ணை வழி மறித்து பிரச்னை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

  ttn

  இதனால் அந்த பெண் கத்தி ஊரைக் கூட்டியுள்ளார். வயலில் வேலை பார்த்தவர்கள் உட்பட அனைவரும் அந்த பெண் இருந்த இடத்தில் கூடியுள்ளனர். அதனையடுத்து, அந்த பெண் அவர்கள் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இரண்டு பேருக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதில் அவர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஊர்மக்கள் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த இரண்டு பேரில் ஒருவர் ஒட்டுநர் என்றும் மது போதையில் அவர் இவ்வாறு செய்து விட்டதாகவும் மற்றொரு நபர் கூறியுள்ளார். அதன் பின் அந்த இரண்டு பேரையும் ஊர்மக்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.