போட்டோ எடுக்கப்போய் யானை சிலைக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ!

  28
  குஜராத்

  யானை சிலைக்குள் புகுந்து புகைப்படம் எடுக்க முயன்ற பெண் வெளியே வரமுடியாமல் சிக்கி தவிக்கும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  குஜராத்: யானை சிலைக்குள் புகுந்து புகைப்படம் எடுக்க முயன்ற பெண் வெளியே வரமுடியாமல் சிக்கி தவிக்கும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  gujarat

  குஜராத்தில்  உள்ள கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த குடும்பத்துடன் சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த சிறிய யானை சிலைக்குள் சென்று புகைப்படம் எடுக்க முயன்றார். டி-ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த அந்த பெண் எப்படியோ சிலைக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்து விட்டார். அதன் பிறகு உள்ளே சென்றது எவ்வளவு பெரிய தவறு என்பது தெரியவந்தது. ஆம்  உடல் பருமன் காரணமாக, பின்னர் வெளியேற முடியாமல் தவித்த அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் நீண்ட முயற்சிக்குப் பிறகு மீட்டனர்.

   

   இந்த சம்பவத்தை நேரில் கண்ட சிலர் இதை வீடியோவாக எடுத்து வலைதளங்களில்  பதிவிட்டுள்ளனர். இதை கண்ட சிலர். கோயிலுக்கு சாமி கும்பிட வந்துட்டு போட்டோ எடுக்கிறதுல ஆர்வம் காட்டுனா இப்படி தான் ஆகும் என்று வசைபாடி வருகின்றனர்.