போக்குவரத்து விதி மீறல்களின் அபாரதத் தொகை குறைகிறது?!

  0
  2
  Traffic rules

  தமிழகத்தில் இன்னும் மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப் படாத  நிலையில் போக்குவரத்து விதிமீறல்களின் அபராதத் தொகையை குறைப்பது பற்றி தமிழக போக்குவரத்து துறை ஆலோசனை  மேற்கொள்கிறது

  தமிழகத்தில் இன்னும் மோட்டார் வாகன சட்டம் அமல் படுத்தப் படாத  நிலையில் போக்குவரத்து விதிமீறல்களின் அபராதத் தொகையை குறைப்பது பற்றி தமிழக போக்குவரத்து துறை ஆலோசனை  மேற்கொள்கிறது. 

  செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன் படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கும்  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அதிக பட்ச அபராதத் தொகை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநிலம் தங்களது போக்குவரத்து விதிமீறல்களின் அபாரதத் தொகையை குறைத்து அமல் படுத்தியது. 

  ஆனால், தமிழகத்தில் இன்னும் புதிய மோட்டார் வாகன சட்டம் சட்ட பூர்வமாக அமல்படுத்த படாமல் உள்ளது. அதன் காரணமாக இன்று தமிழக போக்குவரத்துத் துறையும், உள்துறையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதிகப் பட்ச அபராதத் தொகை விதித்தால் மோட்டார் வாகன சட்டத்திற்கு  வரவேற்பு இருக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சாலை  விதிகளை பற்றய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்ட பிறகு அபராதத் தொகையை அதிக படுத்தலாம் என தமிழக போக்குவரத்துத் துறை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

  மேலும், புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் ஒரு வார காலத்தில் அமல் படுத்தப்பட இருக்கும் நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் குறைக்க படுமா அல்லது அதே தொகை நீடிக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.