போக்குவரத்து விதிமீறல்களின் அபராதத் தொகையை மாநிலங்கள் குறைத்துக் கொள்ளலாம்: நிதின் கட்காரி

  0
  4
  Nitin gadkari

  போக்குவரத்து விதிமீறல்கள் அபராதங்கள் உயர்ந்த நிலையில், மாநிலங்கள் அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.

  போக்குவரத்து விதிமீறல்கள் அபராதங்கள் உயர்ந்த நிலையில், மாநிலங்கள் அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.

  செப்டம்பர் 1ஆம் தேதி அமல் படுத்தப் பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு பன்மடங்கு அபராதத்தை உயர்த்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. பல மாநில மக்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர்.  குஜராத் மாநிலம் போக்குவரத்து விதி மீறல்களின் அபராதத்தை குறைத்து புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல் படுத்தியது. அதே போல் தமிழகத்திலும் அபராதத் தொகையை குறைப்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருவதாக தகவல்கள் இன்று காலை வெளியாயின. 

  இந்நிலையில், நடுவண் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி விபத்துகளோ, உயிரிழப்புகளோ நிகழக் கூடாது என்பது தான் எங்களின் விருப்பம் , மாநிலங்கள் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்றும், போக்குவரத்தின் அபாரதங்கள் முழுவதும் மாநில அரசிற்கே தவிர மத்திய அரசுக்கு எதுவும் வராது என்றும் தெரிவித்துள்ளார்.