போக்குவரத்து காவலர் அபராதம் போட்டதற்காக நீதிமன்றத்தில் தீக்குளித்த இளைஞர்!

  0
  1
  Fire

  அரியலூரில் வாகன தணிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக போக்குவரத்து காவல்த்துறையினர் வழக்குப் போட்டதற்கு அதிருப்தியடைந்த நபர் நீதிமன்றத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியால் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் இட பிரச்சினை தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக அரியலூர் நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தி குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இரவு தான் மது அருந்தியதாகவும், தற்போது மது அருந்தவில்லை எனவும் போலீசிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட அசோக்குமார்.

  தீக்குளிப்பு

  ஆத்திரமடைந்த அசோக்குமார் அரியலூர் நீதிமன்ற வளாகத்திற்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து விசாரணைக்காக அரியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வாகனத் தணிக்கை தொடர்பாக தீக்குளிக்க முயற்சி செய்தது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.