போக்குவரத்து அபராதத்திற்கான ரசீதில் தமிழ் இல்லை : முக ஸ்டாலின் கண்டனம்

  0
  2
  MK Stalin

  இப்போதெல்லாம், அந்த அபரத்திற்கான ரசீதையும் வழங்குகின்றனர்.

  தமிழக போக்குவரத்து காவல் துறையினர்கள், போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் குற்றத்திற்கு ஏற்றாற் போல அபராதம் விதிப்பர். இப்போதெல்லாம், அந்த அபரத்திற்கான ரசீதையும் வழங்குகின்றனர். அந்த ரசீது முழுவதுமாக ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

  MK Stalin

  புதுக்கோட்டை மாவட்டத்தில், திமுக பிரமுகரின் இல்லத் திருமணவிழாவில் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டதற்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில், தமிழக போக்குவரத்து காவலர்கள் விதிக்கும் அபராத கட்டண ரசீதில் தமிழ் இல்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், ஆங்கிலத்தில் உள்ள அந்த ரசீதைத் தமிழில் மாற்றாவிடில் திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.