பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்: ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த வழக்குப்பதிவு!

  0
  5
  பொள்ளாச்சி வழக்கு

  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  pollachi

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்ததோடு இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்தது.  இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

  pollachi

  இதை தொடர்ந்து பொள்ளாச்சி வழக்கு சிபிஐ- க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து திருநாவுக்கரசின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மற்றும் அவருடன் பொள்ளாச்சி டிஎஸ்பி, மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரும் அதிரடியாக  பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இப்படி  நாள்தோறும் பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பங்கள் பல நடந்தேறிவந்தது. 

  pollachi

  இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகக் கைதாகியுள்ள 5 பேர்  மீதும் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக திருநாவுக்கரசு உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

  தற்போது குற்றவாளிகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தர வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. 

  இதையும் வாசிக்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாட்ஸ் ஆப், பேஸ்புக்குக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை?!..