பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய கழிசடைகளுக்குக் கடுமையான தண்டனை தேவை : மு.க ஸ்டாலின்

  0
  5
  MK Stalin

  பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்தது.

  பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்தது. இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த குமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டனர். திருநாவுக்கரசு மற்றும் சபரி ராஜன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறை அடைக்கும் படி, கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். 

  Rapist

  அதனையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இருவரின் தாயாரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆவணங்கள் தெளிவாக இல்லாததால், அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

  MK Stalin

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

   

  அதில், ‘பொள்ளாச்சி இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இளம்பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய இருவரையும், அதிமுக அரசின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த, கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் அனைவரும், சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.