பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: கோவை எஸ்.பி மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்!

  0
  7
  பாண்டியராஜன்

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட,  கோவை எஸ்பி மற்றும் தமிழக உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட,  கோவை எஸ்பி மற்றும் தமிழக உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  பொள்ளாச்சி  வன்கொடுமை

  abuse

  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

  hc

  இதை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதனால் வழக்கறிஞர் சூரிய பிரகாசம்  இது போன்று இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்.அதனால் கோவை எஸ்பி மற்றும் அரசாணை  வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

  தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு

  ttn

  இந்த மனு நீதிபதி இளந்திரையன் அமர்வின் முன்னிலையில்  வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்துடன் அரசாணை வெளியிட்டதால் அப்பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண்ணுக்குத் தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

   

  மேலும் படிக்க: மாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது