பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: விஜய் சேதுபதி என்ன சொன்னாரு பாருங்க!

  0
  10
  நடிகர் விஜய் சேதுபதி

  பொள்ளாச்சி பாலியல் கொடூர குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா என்று நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

  சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூர குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா என்று நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழ் திரையுலகில் மிக முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் பல்வேறு படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்சேதுபதி முதல்முறையாகத் திருநங்கையாக நடித்திருப்பதால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

  vijaysethupathi

  சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, ‘இந்த விவகாரத்தில் சிலர் பெண்களைக் குறை சொல்கிறார்கள். ஆனால் அது மிகவும் தவறானது. என்னைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இதற்குள் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? அங்கே நடந்தது தவறுதான் என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியும். வெளியான வீடியோவில் கதறிய பெண்ணின் குரலை என்னால் 10 விநாடிகள் கூட கேட்க முடியவில்லை. மனது கஷ்டமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். 

  இதையும் படிங்க: என் சுயசரிதை விரைவில் வெளியாகும்: இளையராஜா அறிவிப்பு!