பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்திக்க போகிறேன்! நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்!

  0
  1
  நடிகை ஸ்ரீரெட்டி

  பொள்ளாச்சியில் பெண்களைச் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

  சென்னை: பொள்ளாச்சியில் பெண்களைச் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

  பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.  இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

  pollachi

  இந்நிலையில் இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் தொடங்கி, திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வருடம் சினிமா துறையினர் மீது பாலியல் புகார் கூறி சர்ச்சை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியதாவது,’ நான் விரைவில் சென்னை வந்து போலீஸ் மற்றும் அரசியல் வாதிகளைச் சந்திக்கவுள்ளேன். பாதிக்கப்பட்ட அந்த பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

  இது 7 வருடங்களாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது. பெண்கள் இப்படி குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாகப் புகார் அளித்தால்தான் நியாயம் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் போராடப் போகிறேன்.   

  நம் நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் சட்டமாக்கப்பட வேண்டும். நீதித்துறையைச் சீர் செய்ய வேண்டும். அப்போது தான் இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது. பொள்ளாச்சி சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு இரண்டு நாட்களாக பெரும் கவலையடைந்துள்ளேன். பலாத்கார குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடக் கூடாது. அவர்களுக்குச் சரியான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.