பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கொடூர மனம் படைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்! நடிகர் சத்யராஜ் கருத்து! 

  0
  2
  நடிகர் சத்யராஜ்

  பொள்ளாச்சியில் பெண்களைச் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

  சென்னை: பொள்ளாச்சியில் பெண்களைச் சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். 

  பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. 

  pollachi

  இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.அவர்களது ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

  இந்நிலையில் இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் தொடங்கி, திரைத்துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம், இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

  மேலும், மனநலம் சம்மந்தப்பட்ட பாடத்திட்டம் பள்ளியிலிருந்தே இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அதனால் மட்டும் இந்த மிருகங்கள் மாறிவிடுவார்கள் என நான் நம்பவில்லை. இது போன்ற கொடூரமான மனம் படைத்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்கத்தான் வேண்டும் மன்னிக்க முடியாது. உடனடியாக சட்டத்திற்கு உட்பட்டு இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.