பொள்ளாச்சியில் மீண்டும் ஆபாச படம் எடுத்து மிரட்டல் | அதிர வைக்கும் நிஜம்

  0
  11
  பொள்ளாச்சி க்ரைம்

  மானவிகளை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்ததுடன்,  அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பலத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இத்தனைக்கும் இளைஞர்களின் இந்த செயலை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோர்களையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

  பொள்ளாச்சி கொடூரத்தை அத்தனை சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கான அப்பாவி பெண்களின் வாழ்க்கையில் காமூகர்கள் விளையாடியதையும், பெண்கள் கதறி அழுத வீடியோக்கள் எல்லோர் மனதிலும் ஏற்படுத்திய ரணம் ஆறுவதற்குள் மீண்டும் பொள்ளாச்சியில் ஆபாச புகைப்படங்கள் எடுத்து மிரட்ட ஆரம்பித்திருக்கிறது ஒரு கும்பல்.

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவனது நண்பர்கள். ஆனைமலைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி இந்த ஐந்து பேரும் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு அந்த மாணவிகள் சம்மதிக்காததால், அவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது வலுக்கட்டாயமாக அந்த மாணவிகளின் கையைப் பிடித்து இழுத்து கட்டியணைத்தவாறும், முத்தம் கொடுப்பது போன்றும் விதவிதமாக ஆபாசமாகப் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.பொள்ளாச்சி க்ரைம்

  மானவிகளை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்ததுடன்,  அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பலத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இத்தனைக்கும் இளைஞர்களின் இந்த செயலை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோர்களையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
  இதனையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் ஐவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் முகம்மது சபீர் மீது மட்டும் கூடுதலாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.