பொருளாதார ரீதியாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  0
  5
  cabinet

  பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

  புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

  பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 10% கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.  

  மேலும், அரசு வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

  இந்தியா முழுமைக்கும் சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் பொருளாதார ரீதியாக தற்போது இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.