பொங்கல் பரிசு வழங்க ரூ. ரூ.1,677 கோடி நிதி ஒதுக்கீடு..இந்த தேதிகளில் விநியோகம் !

  0
  2
  பொங்கல் பரிசு

  தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதற்காக ரூ.1,677 கோடியைக் கூட்டுறவு வங்கிகளுக்குத் தமிழக அரசு கொடுத்துள்ளது.

  பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்பு துண்டு ஆகிய பரிசுப் பொருட்களுடன் ரூ.1000 ரூபாயும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசை, தேர்தல் முடியும் வரை கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, தேர்தல் பணிகள் முடிவடைந்ததால் வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்களுக்குப் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  ttn

  இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதற்காக ரூ.1,677 கோடியைக் கூட்டுறவு வங்கிகளுக்குத் தமிழக அரசு கொடுத்துள்ளது. பொங்கல் பரிசு வாங்கும் மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தெரு வாரியாக குறிப்பிட்ட நாட்களில் வழங்கவும், அந்த தேதிகள் ரேஷன் கடைகளில் அட்டவணையாக ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.