பொங்கல் பண்டிகை! சாதனைப்படைத்த தமிழக டாஸ்மாக்!! 

  0
  4
  டாஸ்மாக்

  தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் மட்டும் 605கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

  தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் மட்டும் 605கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

  பொங்கல் பண்டிகை கடந்த 15ந்தேதி கொண்டாடப்பட்டது. மறுநாள் திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. டாஸ்மாக் விடுமுறை காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே மது வகைகளை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டனர் குடிமகன்கள். கடந்த 14ந்தேதி போகியன்று 178 கோடி ரூபாய்க்கும், 15ந் தேதி பொங்கலன்று 253 கோடி ரூபாய்க்கும், 17ந் தேதி காணும் பொங்கலன்று 174 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

  டாஸ்மாக்

  தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டலில் டாஸ்மாக் மதுக்கடைகள் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.