பொங்கலுக்கு என்ன மாதிரி புடவை கட்டப்போறீங்க… அதுக்கு மேட்சான நகைகள் எதுன்னு தெரியுமா..!? 

  0
  4
  நகைகள்

  பொங்கல் பண்டிகை இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது.ஊருக்கு பயணம்,புது ட்ரெஸ் பர்ச்சேஸ் என்று மால்களிலும்,பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.ஆண்களைப் பொறுத்தவரை வேட்டி,சட்டை என சிம்பிளான தேர்வு என்பதால் பிரச்சினை இல்லை.பெண்களுக்கு அப்படியில்லையே! 

  பொங்கல் பண்டிகை இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது.ஊருக்கு பயணம்,புது ட்ரெஸ் பர்ச்சேஸ் என்று மால்களிலும்,பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.ஆண்களைப் பொறுத்தவரை வேட்டி,சட்டை என சிம்பிளான தேர்வு என்பதால் பிரச்சினை இல்லை.பெண்களுக்கு அப்படியில்லையே! 

  tridha

  எந்த ஸ்டைலில் சாரி கட்டுவது,எந்த டிசைனில் சாரி செலக்ட் பண்ணுவதுன்னு நிறைய யோசிச்சு இருப்பீங்க.. ஆனால், புடவைக்கு மேட்சிங் ஜூவல்லரி அணிவது பற்றி டிஸைட் பண்ணிடீங்களா? எல்லாத்தையும் கரெக்ட்டா செஞ்சுட்டு மண்டைல இருக்குற கொண்டையை மறந்துட்டேனு இருக்குற பாடிசோடாவை போல ஆகிடாதீங்க!

  model

  நகைதானே, ஏதாவது போட்டுக்கலாம்னு நெனைக்காதிங்க லேடீஸ்! நகை என்பது நீங்க மேக் அப் போடலென்னாக்கூட கூட உங்களை அழகாக எடுத்துக்காட்டும். ஒரு முழுமைப்படுத்தும் முக்கியமான ஒன்று அதை மிகவும் சரியான  ஸ்டைல் புடவைக்கு ஏற்ற நகையைத் தேர்வு செய்வது ரொம்ப  முக்கியம். 

  இங்கு எந்தெந்த ஸ்டைல் புடவைகளுக்கு எந்தமாதிரியான நகைகள் மேட்ச் ஆகும் என்பதை சொல்கிறோம்… படித்துப் பார்த்தால் உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும்.

  1.பட்டுபுடவைகளுக்கேற்ற லேயர்டு நகைகள்:

  நீங்கள் பொங்கலுக்கு பட்டுப்புடவை கட்டப்போகிறீர்களா? அப்போ உங்களுக்கு இந்த லேயர்டு நகைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த நகை தனியே வராமல் ஒரே செட்டாக வரும்,

  silk saree

  அதாவது ஒரே அடுக்காக இருக்கும்.இது இப்போது மிகவும் ட்ரெண்டியாக மார்க்கெட்டுகளிலும் ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கின்றன. இவைகளை மணப்பெண்கள்  திருமண ரிசப்ஷன் போது அணிவதை அதிகம் பார்த்திருக்கக்கூடும். 

  2.தங்கத்தை மிஞ்சும் இமிட்டேஷன் நகைகள்:

  இப்போது பெண்கள் பெரும்பாலும் தங்க நகைகளை அணிவதையே பெரிதும் விரும்புவதில்லை! மாறாக இமிட்டேஷன் நகைகளை அணிய ஆசைப்படுகின்றனர்.

  jewllery

  மேலும் தங்கம் விற்கும் விலைக்கு இமிட்டேஷன் ஜூவல்லரி தான் வசதியாக இருக்கும். அதே போல புடவைகளுக்கு கிராண்ட் லூக்கையும் தரும் விதத்தில் அமையும்.

  3.காட்டன் புடவைகளுக்கு ஏற்ற ஆக்சிடைஸ்டு சில்வர் நகைகள்:

  காட்டன் புடவை கட்ட போகிறீர்களானால் உங்களுக்கு இந்த ஆக்சிடைஸ்டு சில்வர் நகைகள் மிகவும் பொருந்தும், ஆக்சிடைஸ்டு நகைகள் ஒரு பாரம்பரிய ஆன்ட்டிக் லுக்கை உங்களுக்கு தருவதால் இன்னும் ட்ரடிஷனலாக உணருவீர்கள்.

  cotton

  இவை ஆன்லைன் ஸ்டோர்களில் அதிகம் கிடைக்கும் மார்க்கெட்டுகளில் தேடி செலக்ட் செய்தும் வாங்கிக்கொள்ளலாம்.

  4.வெஸ்டர்ன் ஸ்டைலுக்கு ஏற்ற பொஹீமியன் சிக் ஜூல்லரி:

  இந்த போகோ சிக் நகைகள் என்று அழைக்கப்படுபவை பொஹீமியன் மக்களின் பழங்கால நகை வழக்கம். இவை இப்போது நம் பெண்களிடையே பெரிதும் ட்ரெண்டாகியுள்ளன.

  jewllery

  குறிப்பாக இவை உங்கள் வெஸ்டர்ன் ஆடைகளுக்கும்,வெஸ்டர்ன் ஸ்டைல் புடவைகளுக்கும் நன்கு பொருந்தும் வண்ணமாக இருக்கும்.

  5.உங்களை எஸ்ப்ரெஸ் செய்யும் ஸ்டேட்மென்ட் நகைகள்:

  ஸ்டேட்மெண்ட்  நகைகள் உங்களை எக்ஸ்பிரஸ் செய்யும் விதத்தில் இருக்கும். இவை உங்கள் லுக்கை மிகவும் கம்பீரமாக காட்டும்.இவை சிங்கள் பீஸ் அணிந்தாலே போதுமானதாக இருக்கும்,

  je

  இது உங்கள் ஆடை சிம்பிளா இருந்தாலும் ஹைலைட்டாக தெரிவீர்கள். இவை உங்கள் புடவை லூக்கிற்கு ஒரு முழுமையை தரும்.

  6.ட்ரெண்டிங் சோக்கர்ஸ்:

  girl

  இந்த சோக்கர்ஸ் உங்கள் புடவைகளுக்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும், கழுத்தை ஒட்டி அணியும் இந்த நகைகள் கழுத்தை முழுமையாக காட்டும் விதத்தில் அமையும்.பெரும்பாலும் இப்போது அணைத்து பெண்களும் விரும்பி அணியும் நகையாக இவை ட்ரெண்ட் ஆகியுள்ளன.

  இந்தப்பொங்கலுக்கு இப்படி வெரைட்டியான நகைகளை உங்கள் புடவை லூக்கிற்கு ஏற்றவாறு அணிந்து அசத்துங்கள்.

  #ஹாப்பிபொங்கலோபொங்கல்!