‘பைனலுக்கு சென்ற முகின்’ : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை!

  0
  1
  கமல் ஹாசன்

  பிக் பாஸ்  3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ்  3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

  bb

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  இதற்காக போட்டியாளர்கள் கடுமையாக மோதி வருகின்றனர். இதில் முதலில் தர்ஷன் சில போட்டிகளில்  வெற்றி பெற்று வந்த நிலையில் அடுத்து வந்த அனைத்து போட்டிகளிலும் முகின்  வெற்றி பெற்று வருகிறார்.அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா பின்னர் இறுதியாகக் கவின் இருக்கிறார்கள். இதில் முகின்  டிக்கெட் டு  பினாலே  மூலம் இறுதிச் சுற்றுக்கு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

   

  இந்நிலையில் பிக் பாஸ்  3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல் ஹாசன் , கேம் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சி முழுவதும் வியாபித்து இருக்கிறது. என்ன அந்த கேம். உடலால் மோதி விளையாடுவதா? மனதால் மோதி விளையாடுவதா? இரண்டும் கலந்தது தான். இதில் மனதால் மோதி கொள்பவர்களுக்கே காயம் அதிகம். இந்த வெற்றி பயணத்தை நோக்கிய ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது. இன்னொருவருக்குக் கனவு கலைய போகிறது’ என்று கூறுகிறார்.