பைக்கிற்குள் புகுந்த பாம்பு… நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு !

  0
  7
  சலூன் தொழில்

  விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பை பைக்கில் இருந்து வெளியே எடுக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

  தென்காசியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் இன்று காலை வெளியே செல்வதற்காகத்  தனது பைக்கை எடுக்கச் சென்றுள்ளார்.

  tt

  அப்போது, திடீரென அந்த பைக்கிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அதனை வெளியே எடுக்க சக்திவேல், முயற்சித்துள்ளார் ஆனால் முடியவில்லை. அதனால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் அங்கே விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பை பைக்கில் இருந்து வெளியே எடுக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

  ttn

  சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.  மீட்டதற்குப் பிறகு, அது நல்ல  பாம்பு என்று தெரிய வந்துள்ளது. அந்த பாம்பு மிகவும் சிறியதாக இருந்ததால் அதனை வெளியே எடுக்கத் தாமதம் ஆனது என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைக் காண அந்த பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் திரண்டனர். இதனையடுத்து, அந்த பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.