“பேனை கொல்வது போல பெண்ணை கொள்ளும் ஹைதராபாத் “-கொலை செய்து மலையில் வீசியவருக்கு வலை. 

  0
  1
  representative image

  திங்கள் கிழமை காலை 7 மணியளவில், இயற்கை உபாதையை கழிக்க சென்ற டங்கேதுபள்ளியின் சில கிராமவாசிகள், அந்த பெண்ணின் நிர்வாண உடலை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

  ஹைதராபாத்தில் திங்கள்கிழமை இரவு செவெல்லாவில்அடையாளம் தெரியாத நபர்கள்  ஒரு பெண்ணைக் கொன்று அவரது உடலை ஒரு மலைப்பகுதியில்  வீசிவிட்டு சென்றுள்ளார்கள். 
  தங்கேதுபள்ளி முதல் விகராபாத் சாலை வரை உள்ள மலைப்பகுதியில்  நிர்வாண நிலையில் உள்ள பெண்ணின் சடலத்தை உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தனர்.
  திங்கள் கிழமை காலை 7 மணியளவில், இயற்கை உபாதையை கழிக்க சென்ற டங்கேதுபள்ளியின் சில கிராமவாசிகள், அந்த பெண்ணின் நிர்வாண உடலை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
  அவரை கொலை செய்தவர்கள்  அந்த பெண்ணின் கைகளை ஒரு கயிற்றால் கட்டி, ஒரு பாறாங்கற்களால்  அவரின்  தலையில் அடித்து நொறுக்கி கொலை செய்துள்ளனர். அவரின் உடலில் ஒரு தங்கச் சங்கிலியும் தங்க மோதிரமும் இருந்தன, அவளது வளையல்கள் கூட அருகிலேயே காணப்பட்டன.

  “அவரை வேறு எங்கோ கொலை செய்துவிட்டு,   உடலை இங்கே வீசிவிட்டு சென்றதாக  நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர்கள் உடலை வீசிய  பின்னர் அவர்கள் முகத்தைத் சிதைத்துள்ளனர். அவர்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பதை அறிய அவரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று  இன்ஸ்பெக்டர் கூறினார்.