பேனர் அகற்றுவதில் சிக்கல்… ஊழியர்களை தாக்கிய மதிமுகவினர்… வருத்தம் தெரிவித்த வைகோ!

  0
  1
  Vaiko

  மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை தாக்கியதால் ம.தி.மு.க செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

  மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை தாக்கியதால் ம.தி.மு.க செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

  கடந்த 15 ஆம்  தேதி ஒய்.எம்.சி.ஏ  மைதானத்தில் அண்ணா பிறந்தநாளை கொண்டாட ம.தி.மு.க வினர் ஏற்பாடு செய்து விழாவை நடத்தினர். அதற்காக, சைதாப்பேட்டையில் சிறிய பதாகைகளையும், கொடிகளையும் வைத்திருந்தனர். இன்று, அதனை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பேனர்களை நீக்க சென்றுள்ளனர்.

  அப்போது அங்கு வந்த ம.தி.மு.கவினர் மாநகராட்சி ஊழியர்களையும், செயற்பொறியாளர் வரதராஜனையும் தாக்கியதாக புகார் எழுந்தது.  வரதராஜனை தாக்கிய ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ, தனது கட்சி தொண்டர்கள் செய்த தவறுக்காக வருந்துவதாகவும், சண்டையில் தனது கட்சி தொண்டரும் காயம் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.